top of page
WhatsApp Image 2024-06-16 at 13.33.42.jpeg

கோவில் விவரம்

 

அருள்மிகு ஸ்ரீ  வீரமாத்திஅம்மன்

சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம்,  எட்டிமாணிக்கம்பட்டி, கூலிப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ  வீரமாத்திஅம்மன்  திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சேலம்-திருச்செங்கோடு பிரதான சாலையில் சேலத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் கிழக்கு நோக்கிய ராஜா கோபுரத்துடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சுமார் 200 ஆண்டுகளாக வீரபாண்டி பூர்வீகமாக கொண்ட விஸ்வகர்மா குலத்தினர் தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். 2004 ல் கோவில் திருகோபுரம் அமைத்து கும்பா அபிஷேகம் நடைபெற்றது. பிறகு 2016 ல் கோவில் மண்டபம் அமைக்கப்பட்டு இரண்டாவது கும்பா அபிஷேகம் நடைபெற்றது. 

​இங்கு மூலஸ்தான கர்ப்ப கிரகத்தில் அகிலபுவன மாதாவாக, அஷ்டபுஜங்களுடன், வலதுகாலை நீட்டி, இடதுகாலை மடக்கி, கிழக்கு நோக்கி அமர்ந்தபடி நல்லோரை காக்கும் நாயகியாக, கொற்றவையாக, வெற்றியைத்தரும் வீரதுர்க்கையாக, அன்னை அருள்மிகு வீரமாத்தி அம்மன் காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால், நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

நிகழ்வுகள்

அனைத்து பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் ஆடிப்பெருக்கு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 

கீழ்க்கண்ட முக்கிய திருநாட்களில் விசேஷ பூஜை நடைபெறும்:-

  • ஆங்கில புத்தாண்டு

  •  தை பூசம்

  • மகா சிவராத்திரி

  • தமிழ் புத்தாண்டு

  • அட்சய திரிதியை

  • வைகாசி விசாகம்

  • ஆனி உத்திரம்

  • ஆடி பெருக்கு

  • ஆடி பூரம்- கும்பாபிஷேக நாள்

  • விநாயகர் சதுர்த்தி

  • விஸ்வகர்மா ஜெயந்தி

  • நவராத்திரி

  • கந்தசஷ்டி சூரசம்காரம்

  • கார்த்திகை தீபம்

WhatsApp Image 2024-07-21 at 01.26.23.jpeg

விஸ்வகர்மா மற்றும் காயத்ரி தேவி

 

ௐ ஸ்ரீ விராட் விஸ்வ பிரம்மனே நமக!

விஸ்வாய விஸ்வகர்மஞ்ச விஸ்வமூர்த்தி பராத்பரம்

விஸ்வமாதா பிதாரூபம் விஸ்வகர்ம நமோஸ்துதே!!

விஸ்வம் என்பதற்கு 'உலகம்' எனவும் 'கர்மா' என்பதற்குப் படைக்கிறவர் என்றும் பொருள்படுகிறது.'விஸ்வகர்மா' என்பதற்கு 'உலகத்தை படைக்கிறவர்' 'பிரபஞ்சசிற்பி' என்றும், உலக படைப்புகளுக்கு அடிப்படியானவர் என்றும் வேதா நூல் கூறுகிறது.

 

இங்கு பிரதிஷ்டை செய்துள்ள விஸ்வகர்மா காயத்திரி தேவி வழிபட்டு தொழில் அபிவிருத்தி மற்றும் புதிய வீடு கட்டவும் தடைபட்ட வீடு கட்டும் முயற்சி வெற்றிபெறவும் உகந்த ஸ்தலமாக உள்ளது.

IMG_2856.jpg
bottom of page